'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பரத் தற்போது லார்ட் லிவ்விங்ஸ்டன் 700 கண்டி என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் குஞ்சாகோ போப்பன், நெடுமுடி வேணு, ரீனு மேத்யூஸ், சன்னி வேயான் ஆகியோர் நடிக்கிறார்கள், ஜெயஷ் நாயர் இசை அமைக்கிறார். ரெக்ஸ் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருதுபெற்ற இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். லைப் ஆஃப் பை படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கிய வருண், திலீப் இந்த படத்துக்கு கிராபிக்ஸ் பணியாற்றியிருக்கிறார்.
வெவ்வேறு துறைகளை சேர்ந்த 8 பேர் தாங்கள் வாழும் மண்ணை காப்பாற்ற காட்டுக்குள் பயணிக்கிறார்கள். நாட்டையே அச்சுறுத்தும் ஒரு ஆபத்தை தடுத்து நிறுத்த செல்கிறார்கள். அந்த திகிலூட்டும் பயணக் கதை. அந்த 8 பேரில் பரத்தும் ஒருவர். வருகிற 16ந் தேதி படம் கேரளாவில் வெளிவருகிறது. அதனை தமிழில் வெளியிடவும் தீர்மானித்திருக்கிறார்கள். இதற்கான பணியை பரத்தே முன்னின்று செய்து வருகிறார்.