தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் மாதவன் ஜோடியாக 'யாவரும் நலம்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நீது சந்திரா. அதன் பின் விஷால் ஜோடியாக 'தீராத விளையாட்டுப் பிள்ளை', ஜெயம் ரவி ஜோடியாக 'ஆதி பகவன்', ஆகிய இரண்டு தோல்விப் படங்களில் நடித்தார். மிஷ்கின் இயக்கிய 'யுத்தம் செய்' படத்தில் இயக்குனர் அமீருடன் 'கன்னித் தீவு பொண்ணா' பாடலுக்கும், 'சேட்டை' படத்தில் 'லைலா லைலா...' பாடலுக்கும், திலகர் படத்தில் 'டும் டும் எதுக்கு...' ஆகிய பாடலுக்கும் நடனமாடியுள்ளார். தற்போது ஆர்கே ஜோடியாக 'வைகை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்து வருகிறார்.
ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள நீது சந்திரா தற்போது தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். இவரது தயாரிப்பிலும் சகோதரர் நிதின் சந்திரா இயக்கத்திலும் உருவாகியுள்ள 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் பீகார்' என்ற திரைப்படம் இம்மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது. பீகாரில் 2003 மற்றும் 2004ம் ஆண்டில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. ஒரு பீகாரியாக இப்படத்தை தயாரித்திருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் என நீது சந்திரா தெரிவித்துள்ளார்.
தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ள ஆசிஷ் வித்யார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் முக்கிய மூன்று கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.