பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'விரும்புகிறேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா. கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ்... என முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்து புன்னகை இளவரசியாக வலம் வந்தார். குடும்ப பாங்கான நடிப்பாலும், தனது புன்னகையாலும் ரசிகர்களை ஈர்த்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு, சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு விகான் என்று பெயர் வைத்துள்ளனர். நடிகை சினேகா இன்று(அக்., 12ம் தேதி) தனது 33வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி...
இந்ததாண்டு பிறந்தநாள் பற்றி...?
ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாள் மறக்க முடியாத ஒன்றாகத்தான் இருந்துள்ளது. பெரும்பாலும் வெளிநாடுகளிலோ இல்லை உள்ளூரிலேயே ஒரு பெரிய ரெஸ்ட்ராண்ட்டிலோ தான் பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் எனது குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டினேன். அப்படியே மதர் தெரஸா காப்பகத்திற்கு சென்று அங்குள்ளவர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டினேன். இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
மீண்டும் நடிக்க வருவீர்களா..?
பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு முன்பு, தொடர் படப்பிடிப்புகளால் பிஸியாக இருப்பார்கள். திருமணத்திற்கு பிறகு கணவர், குழந்தை, குடும்பம் என்று பிஸியாகிவிடுவார்கள். தற்போது எனது மகன் குழந்தையாக இருப்பதால் நடிப்பது சிரமம். எனது மகன் விகான் திடீரென அமைதியாக இருப்பார், திடீரென படு சேட்டை செய்வார். அதை நான் ரசிக்கிறேன். எனது மகன் கொஞ்சம் பெரியவனானதும் கண்டிப்பாக மீண்டும் சினிமாவில் நடிப்பேன்.
உங்கள் ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது.?
என்னுடைய முதல் படத்திலிருந்து இப்போது வரை எனது வெற்றிக்கு பின்னால், எனது வளர்ச்சிக்கு பின்னால் எனது ரசிகர்கள் இருந்துள்ளார்கள். அவர்களை என்றும் மறக்கமாட்டேன்.
உங்கள் கணவர் கொடுத்த பிறந்தநாள் பரிசு.?
இந்தாண்டு எனக்கு பிடித்தமான இரண்டு விஷயங்களை அவர் பிறந்தநாள் பரிசாக கொடுத்தார். பொதுவாக எனக்கு ஹேண்ட்பேக் ரொம்ப பிடிக்கும். இந்தாண்டு ஒரு ஹேண்ட்பேக்கும், தங்க நகையும் பரிசாக அளித்தார்.
இவ்வாறு நடிகை சினேகா கூறினார்.