‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க உள்ள 'எந்திரன் 2' படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தீபிகா படுகோனே, காத்ரீனா கைப் ஆகியோர் நடிக்கப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. தற்போது அதில் மேலும் ஒரு ஆச்சரியமாக எமி ஜாக்சனையும் அந்தப் பட்டியலில் இணைத்துள்ளனர்.
ஷங்கர் இயக்கி கடைசியாக வெளிவந்த 'ஐ' படத்தில் எமி ஜாக்சன்தான் நாயகியாக நடித்திருந்தார். ஆனால், கடைசி கட்டப் படப்பிடிப்பின் போது ஷங்கருக்கும், எமி ஜாக்சனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதனால், ஷங்கர் ஒரு பாடலைப் படமாக்குவதைக் கூட கைவிட்டு விட்டார் என்றார்கள். இருந்தாலும் கடைசியாக எமி ஜாக்சன் நடனமாடிய அந்தத் தனிப்பாடலை ஷங்கர் எடுத்து முடித்துத்தான் படத்தை வெளியிட்டார்.
இப்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் எமி ஜாக்சன் நடிக்கப் போகிறார் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எமி ஜாக்சன் இருந்தால் யுகே, யுஎஸ் போன்ற நாடுகளிலும் படத்திற்கான வரவேற்பு நன்றாக இருக்க வாய்ப்புள்ளது என்பதால் ஷங்கர் அந்த முடிவை எடுத்திருக்கலாம் என்கிறார்கள். ஆனாலும், முறையான அறிவிப்பு வரும் வரை எதையும் உறுதி செய்யவும் முடியாது, ஷங்கர் படமாயிற்றே...?.