பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகர் விக்ரமுடன் சமந்தா இணைந்து நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் இணைந்து விஐபி-2, தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரமோற்சவம் போன்ற படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா, அடுத்ததாக நடிகர் ராணாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
தமிழில் வெளியான ஆரம்பம் படத்தில் அஜித்தின் நண்பனாக நடித்த ராணா தற்போது மலையாள திரைப்படமான பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கின்றார். மேலும் பல தெலுங்கு படங்களில் பிசியாகிய நடித்து வரும் ராணா, எழுத்தாளர் சங்கல்ப் ரெட்டி எழுதிய ப்ளூ பிஷ் எனும் புத்தகத்தை தழுவி எடுக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹாஷி(Ghazi) எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பல மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சங்கல்ப் ரெட்டியே இயக்கவுள்ளார். ராணா கப்பற்படை அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளராம். தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.