இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவிதேஜா மற்றும் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் வெளிவந்த கிக் 2 படம் தோல்வியைத் தழுவியது. என்.டி.ஆர் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் பெரும் பொருட்செலவில் நடிகர் கல்யாண் ராம் தயாரித்த கிக் 2 படத்தை இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்கியிருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கல்யாண் ராமிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இப்படத்தின் வெளியீட்டின் போது நிதிநெருக்கடி ஏற்பட்டதாகவும் அப்போது நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ.6 கோடி கொடுத்து கல்யாண் ராமிற்கு உதவியதாகவும் டோலிவுட்டில் தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் இவற்றை ஜூனியர் என்.டி.ஆர் மறுத்துள்ளார். கல்யாண் ராம் நடித்துள்ள ஷேர் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த ஜூனியர் என்.டி.ஆர் கிக் 2 பட வதந்தி குறித்து முதன்முறையாக பேசினார். கல்யாண் ராமிற்கு நிதி நெருக்கடி எதுவும் வரவில்லை என்றும் தான் ரூ.6 கோடி கொடுத்ததாகக் கூறப்படுவதிலும் உண்மை இல்லை என ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார்.