‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
கமல், கவுதமி நடித்த பாபாநாசம் படத்தில் வில்லனாக நடித்தவர் ரோஷன். கமலின் மகள் குளிப்பதை வீடியோ படம் எடுத்து பின்பு அதைவைத்து மிரட்டுகிற கேரக்டரில் நடித்திருந்தார். இதன் மூலப்படமான மலையாள த்ரிஷ்யத்திலும், தெலுங்கு ரீமேக்கிலும் இவரே வில்லனாக நடித்திருந்தார். தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் தமிழில் குபேரராசி என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார்.
ஐ அண்ட் பி மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் மது, ஜெய்மோன் இணைந்து தயாரிக்கிறார்கள். கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார், ரோஷனுக்கு ஜோடியாக அபிராமி, ஸ்ரீரஞ்சனி என்ற இரண்டு புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சந்தமாமா படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.
"தனது பாரம்பரிய வீட்டை காப்பாற்ற கடன் கேட்டு அலையும் ஹீரோவுக்கு சென்னை நண்பன் உதவுவதாக கூறுகிறான். அதை நம்பி சென்னை வரும் ஹீரோ. இங்கு பலரால் பல வழிகளில் ஏமாற்றப்படுகிறார். பல சிக்கல்களில் சிக்க வைக்கப்படுகிறார். அதிலிருந்து மீண்டு தன் வீட்டை ஹீரோ மீட்டாரா என்கிற கதை. ஆக்ஷன் கதை" என்கிறார் இயக்குனர் ராதாகிருஷ்ணன்.