ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த ஆச்சி மனோரமாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தமிழ் சினிமாவின் 'ஆச்சி' என்று அழைக்கப்பட்டவர் நடிகை மனோரமா, 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர். இவர் நடிக்காத கேரக்டரே இல்லை எனும் அளவிற்கு சினிமாவில் சாதனை படைத்தவர். நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனோரமாவின் உடல் சென்னை, தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த் மனோரமாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.