ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது முன்னணி கதாநாயகிகளாக இருக்கும் நடிகைகளுக்கு அழகில் சற்றும் குறைந்தவர் இல்லை அட்டகத்தி நந்திதா. அதிலும் அவருடைய தெற்றுப்பல் சிரிப்புக்கு சொத்தையே எழுதி வைக்கலாம் என்கிற அளவுக்கு கொள்ளை அழகு. அட்டகத்தி தொடங்கி பல படங்களில் நடித்தநிலையிலும் நந்திதாவுக்கு சரியான பிரேக் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அவர் நடித்த எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி ஆகிய படங்கள் வெற்றிப்படங்கள்தான். ஆனாலும் நந்திதாவுக்கு முதல்வரிசையில் இடம் கிடைக்கவில்லை.
புலி படத்தில் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, மகிழ்ச்சியில் துள்ளினார். ஆனால் இரண்டு காட்சிகளில் மட்டுமே தன் முகம் தெரிந்ததைக் கண்டு நொந்துபோனார். இப்போதைய அவரது ஒரே நம்பிக்கை... சீனுராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படமும், ராதாமோகனின் உப்புக்கருவாடு படமும் தான். இடம்பொருள் ஏவல் படம் எப்போது வெளியாகும் என்றே தெரியாத சூழலில் உப்புக்கருவாடு படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார் நந்திதா.
உப்புக்கருவாடு நந்திதாவின் நம்பிக்கையை காப்பாற்றுமா?