ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பட்டாஸ் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கல்யாண் ராம் நடித்து வரும் ஷேர் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஹைதராபாத்தில் உள்ள நட்ச்சத்திர ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றது. இயக்குநர் மல்லிகார்ஜுனா இயக்கும் இப்படத்தில் நடிகை சோனல் சௌகன் நயாகியாக நடித்துள்ளார்.நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஷேர் பட பாடல்களை வெளியிடவுள்ளார். கல்யாண் ராம், சோனல் சௌகன் என படக்குழுவினர் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தினை தயாரிப்பாளர் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். டோலிவுட்டின் முன்ணனி இசையமைப்பாளராக வளர்ந்துள்ள தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.