தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய், அஜித் ஆகிய இருவரது படங்கள் வந்தாலும் போட்டிதான், டீசர், டிரைலர் ஆகியவை வந்தாலும் போட்டிதான் என்றாகிவிட்டது. எத்தனை மாதங்கள் இடைவெளிவிட்டு வந்தாலும், இரண்டையும் ரசிகர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது நடந்து வருகிறது. விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த டிரைலர் வெளியான ஒரு மாதங்களுக்குள் இந்தியாவிலேயே அதிக லைக்குகள் பெற்ற சாதனை என்ற பெருமையைப் பெற்றது.
நேற்று வரை 'புலி' டிரைலர் 1,12,000 லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்து வந்தது. அந்த சாதனையை நேற்று இரவு 'வேதாளம்' படத்தின் டீசர் முறியடித்துவிட்டு. இப்போது 'வேதாளம்' டீசர் 1,14,000 லைக்குகளைக் கடந்து இந்தியாவிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற ஒரு டீசர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. 'புலி' நம்பர் 1 சாதனையைப் பிடிக்க மொத்தமாக 23 நாட்களானது. ஆனால், 'வேதாளம்' நம்பர் 1 சாதனையைப் பிடிக்க வெறும் 2 நாட்களுக்கும் குறைவாகவே ஆனது.
அதே சமயத்தில் 'டிஸ்-லைக்'குகளைப் பெற்றுள்ளதிலும் 'வேதாளம்' டீசர் சாதனை படைத்துள்ளது. இந்த டீசருக்கு இதுவரை 37,000க்கும் மேற்பட்ட 'டிஸ்-லைக்குகள்' கிடைத்துள்ளது. 'புலி' இதுவரை 27,000க்கும் மேற்பட்ட 'டிஸ்-லைக்குகள்' மட்டுமே கிடைத்துள்ளன.
இந்தியாவிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற டீசர், டிரைலர் ஆகியவற்றில் தமிழ்ப் படங்கள்தான் சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றன. 500 கோடி ரூபாய் மேல் வசூலாகும் ஹிந்திப் படங்கள் புரியாத சாதனையை 100 கோடி ரூபாய் வரை மட்டுமே சாதனை புரியும் தமிழ்ப் படங்கள் புரிவது மிகப் பெரிய விஷயமாகும். இந்த விதத்தில் இந்திய திரையுலகத்தைப் பொறுத்தவரை ஹிந்தி, தெலுங்கு ஆகிய திரையுலகங்களை விட தமிழ்த் திரையுலகம் முன்னணியில் இருந்து வருகிறது.