ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிறிய இடைவெளிக்கு பிறகு மிர்சி சிவா நடித்துள்ள மசாலா படம் இன்று வெளியாகி உள்ளது. அவருடன் பாபி சிம்ஹா, லட்சுமிதேவி நடித்துள்ளனர். வெண்ணிலா கபடிகுழு ஒளிப்பதிவாளர் லக்ஷ்மண் குமார் இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இருக்கும் என்கிறார் ஷிவா. அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இதுவரை தமிழ் சினிமா தொட்டிராத ஒரு கதை களத்தில் இதுவரை சொல்லப்படாத பாணியில் மசாலா படம் உருவாகி உள்ளது. திரைப்படத்தை சமூக வளைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்களின் கருத்தோட்டத்தில் படத்தை எடுத்துள்ளோம். இயக்குனர் லக்ஷ்மண் குமார் எனது நீண்ட கால நண்பர். அவர் இந்த கதையை சொன்னதுமே அதில் நடிக்க முடிவு செய்தேன்.
இதில் நான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்யும் இளைஞனாக நடித்திருக்கிறேன்.
பிளாட்டினம் கார்டு வாங்குவதுதான் எனது லட்சியமாக இருக்கும். நானும் ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால் இந்த கேரக்டரை மிக எளிதாக நடிக்க முடிந்தது. எனது கேரியரிலும் இது முக்கியமான படமாக இருக்கும். காமெடியாக நடித்திருந்தாலும் அதற்கு உள்ளாக ஒரு சீரியசான விஷயம் ஓடிக் கொண்டிருப்பது புதிதாக இருக்கும். என்கிறார் சிவா.