ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெளிநாட்டுப்படங்களை காப்பியடித்து படம் எடுப்பது என்பது இன்று நேற்று ஆரம்பித்த பழக்கம் இல்லை. ஏறக்குறைய நம் நாட்டில் திரைப்படக்கலை அறிமுகமாகி வளர்ந்த காலகட்டத்திலிருந்தே இந்த நல்ல பழக்கம் நம்மவர்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்சினிமாவில் சரித்திரம் படைத்த படங்களில் ஒன்று அந்த நாள். பாடல்களே இல்லாத படம் என்ற பெருமையைப்பெற்ற இந்தப் படத்தின் திரைக்கதை மிகவும் புதுமையானது. ஒரே சம்பவத்தை பலரும் தங்களின் கோணத்தில் சொல்வதுதான் அந்த நாள் படத்தின் கதை. இங்கே புதுமையாக பேசப்பட்ட இந்தப் படம் அகிராகுரோசாவாவின் ராஷோமான் படத்தின் தழுவல்தான். இதே படத்தை பல வருடங்கள் கழித்து விருமாண்டியாக கமல் எடுத்தார். இப்படியாக வெளிநாட்டுப்படங்களை காப்பியடிக்கும் பழக்கம் கடந்த சில வருடங்களாக அதிகரித்துவிட்டது.
அதே நேரம் எங்கிருந்து திருடப்பட்டது என்பதும் உடனடியாக கண்டுபிடிக்கப்படுவதால் அசிங்கப்படவும் நேர்கிறது. இந்த சூழலில் வெளிநாட்டுப் படங்களின் கதை உரிமையை முறைப்படி வாங்கி ரீமேக் செய்யும் வழக்கம் தற்போது ஆரம்பித்துள்ளது. கமலின் தூங்காவனம் படம் ஸ்லீப்லெஸ் நைட் என்ற பிரஞ்சப்படத்தின் ரீமேக். முறைப்படி உரிமை பெற்றுள்ளதாக தகவல். இதேபோல், 2011 ஆம் ஆண்டு பிரெஞ்ச் மொழியில் வெளிவந்து வெற்றிபெற்ற 'தி இன்டச்சபிள்ஸ்' என்ற படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தமிழில் 'தோழா' என்ற படத்தை எடுத்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் 'ஊப்பிரி' என்ற பெயரில் உருவாகிறது.