அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ்த் திரையுலகம் 'கொலவெறி'யின் ஹிட்டான ஹிட்ஸுக்குப் பிறகு யு டியூபைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. டீசர், டிரைலர், மோஷன் போஸ்டர், லிரிக் வீடியோ, பாடல் வீடியோ, மேக்கிங் வீடியோ, பேட்டி வீடியோ என புதிது புதிதாக எது எதையோ கண்டுபிடித்து யு டியூபில் அரங்கேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.
யு டியூப் ஹிட்ஸ்-க்கும், லைக்குக்கும் முன்னணி நடிகர்களின் படங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் தங்களது அபிமான நடிகரின் படங்களை சாதனை படைக்கும் அளவிற்குக் கொண்டு செல்கிறார்கள். கடந்த மாதம் 'புலி' படத்தின் டிரைலர் இந்தியாவிலேயே 1 லட்சம் லைக்குகளைப் பெற்ற முதல் டிரைலர் என்ற பெருமையைப் பெற்றது. உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்யும் சல்மான் படங்களையே தோற்கடித்த பெருமை 'புலி' படத்திற்கு ஏற்பட்டது.
'புலி' டிரைலர் அந்த சாதனையை நிகழ்த்த ஒரு மாத காலத்திற்கும் மேல் தேவைப்பட்டது. ஆனால் இன்று நள்ளிரவில் வெளியான 'வேதாளம்' டீசர் அதை 12 மணி நேரத்திற்குள் நிகழ்த்தி விடும் நேரத்தில் உள்ளது.
இப்படி இந்தப் படங்களின் டீசர், டிரைலர் ஆகியவற்றிற்குக் கிடைக்கும் ஹிட்ஸ்களும், லைக்குகளும் அந்தப் படங்களின் 'ஹிட்'டுக்குக் காரணமாக அமைகிறதா என்பது விவாதிக்க வேண்டிய ஒரு கேள்வி. 'புலி' படத்தின் டீசரும், டிரைலரும் நிகழ்த்திய சாதனையை அந்தப் படம் நிகழ்த்துமா என்பது கேள்விக்குறிதான். படம் வெளியான இந்த ஒரு வாரத்திலேயே பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
'புலி' படத்தின் சாதனையை மட்டும் முறியடிக்காமல் அந்த விமர்சனங்களையும் 'வேதாளம்' முறியடிக்குமா என்பதே இப்போதைய கேள்வி. யு டியூப் ஹிட்ஸ்-க்கும், படத்தின் ஹிட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்பதை அஜித் ரசிகர்கள் நிரூபிப்பார்களா...?