தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித் படம் போலவே தனுஷ் தற்போது நடித்து வரும் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அஜித் படத்திற்காவது படப்பிடிப்பு முடிவடைதற்குள் பெயரை அறிவித்துவிடுவார்கள். ஆனால், 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இருந்தாலும் இன்னும் படத்தின் பெயரை அறிவிக்கவில்லை. ஒரு வேளை 'வேலையில்லா பட்டதாரி 2' என்றே பெயர் வைத்தாலும் வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது.
தனுஷ் ஜோடியாக முதல்முறையாக சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க முதல் பாகத்தை இயக்கிய வேல்ராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். விரைவில் இந்தப் படத்தின் முதல் பார்வையை வெளியிட இருக்கிறார்கள். இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்ததும் படத்தின் வெளியீட்டுத் தேதியையும், இசை வெளியீட்டையும் அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. நவம்பர் மாதக் கடைசியில் படம் வெளிவரலாம் என்கிறார்கள்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் வினியோகஸ்தர்களிடம் வரவேற்பு இருக்கிறது. தனுஷ் இதற்கு முன் நடித்து வெளிவந்த “மாரி, அனேகன்” ஆகிய படங்கள் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியை நெருங்கவில்லை என்பதே உண்மை. மீண்டும் ஒரு பெரிய வெற்றியை எதிர்பார்த்து தனுஷ் காத்துக் கொண்டிருக்கிறார்.