ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2011ம் ஆண்டு வெளிவந்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த நான்கு ஆண்டுகளில் அவர் இசையமைத்து 10 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. அதில் மூன்று தனுஷ் படங்கள், மூன்று சிவகார்த்திகேயன் படங்கள், ஒரு விஜய் படம், ஒரு ஆர்யா படம். இவையில்லாமல் 'டேவிட், வணக்கம் சென்னை' ஆகிய படங்களும் அந்தப் பட்டியலில் அடங்கும். பத்து படங்களுக்குள்ளாகவே தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் நடித்த 'கத்தி' படத்திற்கு இசையமைப்பாளராகவிட்டார்.
இப்போது மற்றொரு முன்னணி ஹீரோவான அஜித் நடிக்கும் 'வேதாளம்' படத்திற்கு இசையமைத்து வருகிறார். நேற்று வெளியான இந்தப் படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அனிருத்தின் டீசருக்கான இசையும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. குறுகிய காலத்தில் தமிழின் இரண்டு முன்னணி ஹீரோக்களுக்கு அனிருத் இசையமைத்து அவருக்கான ஸ்டார் வேல்யூவை அதிகரித்துக் கொண்டுள்ளார்.
விரைவில் வெளிவர இருக்கும் 'நானும் ரௌடிதான்' படப் பாடல்களும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அடுத்து 'வேதாளம், நானும் ரௌடிதான், வேலையில்லா பட்டதாரி 2, ஆகோ,' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைக்கப் போகிறார். 'அரிமா நம்பி' படத்திற்குப் பிறகு ஆனந்த் சங்கர் விக்ரமை வைத்து இயக்கப் போகும் படத்திற்கும் அனிருத் தான் இசை. அதோடு தெலுங்கில் த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் நிதின், சமந்தா நடிக்கும் 'அ ஆ' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகப் போகிறார். இந்தப் படத்திற்காக அனிருத்திற்கு மிகப் பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக, அனிருத்தின் இசை உலகத்தில் அடை மழை பெய்யப் போகிறது.