தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவையும், இணைய உலகத்தையும் பிரிக்க முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது. அதிலும் இணைய உலகத்தில் அஜித் ரசிகர்களின் அட்டகாசம் அதை விட பல மடங்கு இருக்கிறது. இன்று(அக்.,8ம் தேதி) வெளியான வேதாளம் படத்தின் டீசரை இரண்டு வியத்தகு சாதனைகளைப் புரிய வைத்து அஜித் ரசிகர்கள் அசத்தியிருக்கிறார்கள்.
நள்ளிரவு 12 மணிக்கு வெளியான வேதாளம் டீசர் அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளேயே விறுவிறுவென ஹிட்ஸிலும், லைக்கிலும் ஏறிக் கொண்டே போனது. இன்று மாலை 4 மணிக்கு சுமார் 10 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்த டீசர் தற்போது 11 லட்சத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. 16 மணி நேரங்களுக்குள் எந்த ஒரு திரைப்பட டீசரும் புரியாத ஒரு சாதனையை இந்தப் படம் புரிந்திருக்கிறது.
அடுத்து இரவு 7 மணியளவில் 1 லட்சம் லைக்குகளைக் கடந்து இரண்டாவது சாதனையைப் புரிந்துள்ளது. புலி படத்தின் டிரைலர் 1 லட்சம் லைக்குகளை ஒரு மாதத்தில் கடந்து புரிந்த சாதனையை வெறும் 17 மணி நேரத்திலேயே வேதாளம் படம் புரிந்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். எந்த ஒரு இந்திய நடிகருக்கும் கிடைத்திராத சாதனையை அஜித் படத்தின் டீசர் செய்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இத்தனைக்கும் அஜித் ரசிகர் மன்றங்களைக் கலைத்து பல வருடங்களாகிவிட்டது. இருந்தாலும் அஜித் படம் வெளிவந்தாலே ஓபனிங் வசூல் அள்ளும் என்பார்கள், இப்போது டீசரும், டிரைலரும் கூட அந்த ஓபனிங்கை கொடுக்க ஆரம்பித்துவிட்டது.