நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? |
விஜய், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புலி படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் இதுவரை படத்தின் வசூல் குறையவில்லை என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்கிறார்கள். சென்னையில் உள்ள ஐநாக்ஸ் போன்ற மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் 3 ஸ்கிரீன்களில் புலி படத்தை ரிலீஸ் செய்தனர். இன்றுவரை அதே 3 ஸ்கிரீன்களில் புலி படம் ஓடிக்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். அதே சமயம் பல தியேட்டர்களில் கூட்டம் குறைந்துவிட்டதையும் பார்க்க முடிகிறது. இதனால் படத்தின் வசூலும் குறைந்திருக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை வசூல் குறையவில்லை என்று வைத்துக்கொண்டாலும் புலி படம் பிசினஸ் செய்யப்பட்ட தொகைக்கு இன்னும் 3 வாரங்கள் ஹவுஸ்புல்லாக ஓட வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கணக்கு சொல்கின்றனர். இதற்கிடையில் புலி படம் இயக்க சிம்புதேவனுக்கு 2 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்று திரையுலகில் முணுமுணுப்பு கேட்கிறது.