சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் |
நடிகர் சங்கத்திற்கு வருகிற அக்., 18ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான ஒரு அணியும் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான வேட்புமனு அக்., 1ம் தேதி துவங்கி 3ம் தேதி முடிந்தது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மனுதாக்கல் செய்யப்பட்ட 71 மனுக்களில் 68 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.
தலைவர் பதவிக்கு சரத்குமார், நாசர் தவிர மூன்றாவதாக சிவசாமி என்பவரும் போட்டியிடுகிறார். துணை தலைவர் பதவிக்கு பொன் வண்ணன், கருணாஸ், சிம்பு, விஜயகுமார் மற்றும் மோகன் குமார் போட்டியிடுகின்றனர். பொதுச்செயலாளர் பதவிக்கும் ராதாரவி, சிவசாமி மற்றும் விஷாலும், பொருளாளர் பதவிக்கு கண்ணன் மற்றும் கார்த்தியும் போட்டியிடுகின்றனர். இதுதவிர செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 48பேர் போட்டியிடுகின்றனர்.