‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வேதாளம் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. 90 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் இரண்டு பாடல்காட்சிகள் மட்டுமே பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அனிருத்திடமிருந்து பாடல்கள் வரவில்லை என்பதால், அதுவரை சும்மா இருக்க வேண்டாமே என்று படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலையை ஆரம்பிக்க சொல்லிவிட்டாராம் ஏ.எம்.ரத்னம். அதன்படி தற்போது வேதாளம் படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளநிலையில் டீசர், டிரெய்லர் என அடுத்தடுத்து வெளியிட்டு பரபரப்பை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.
அதன் முதல் கட்டமாக கடந்த சில நாட்கள் முன்பு வேதாளம் என்ற டைட்டிலும், ஃபர்ஸ்ட்லுக்கும் வெளியிடப்பட்டது. இரண்டாவதாக நேற்று இரவு வேதாளம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் அதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரம், யாருடைய ரசிகராகவும் இல்லாத சாதாரண பொதுமக்களின் கருத்தோ வேறு மாதிரி இருக்கிறது. வேதாளம் டீசர் பில்லா -2 படத்தைப் பார்ப்பது போல் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். அஜித் நடித்த படங்களிலேயே பில்லா-2 படு தோல்விப்படம். அந்தப்படத்தைப்போல் வேதாளம் டீசர் இருப்பதாக கருத்து வெளியாவது நல்ல அறிகுறியாக தெரியவில்லையே?