பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
யு டியூப் ஹிட்ஸ், டிவிட்டர், ஃபேஸ்புக் டிரெண்ட்ஸ் ஆகியவைதான் தற்போது தமிழ்த் திரையுலக ரசிகர்களிடையே ஹாட் டாபிக் ஆக இருக்கிறது. 'புலி' படத்தின் டிரைலர் 1 லட்சம் லைக்குகளைக் கடந்து சாதனை புரிந்த போதே அஜித் நடிக்கும் படத்தின் டீசர் வரட்டும் அஜித் ரசிகர்கள் என்ன செய்யப் போகிறார்கள் பாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதை ஒரு சில மணி நேரங்களிலேயே அஜித் ரசிகர்கள் செய்து காட்டி விட்டார்கள்.
இன்று 8ம் தேதி நள்ளிரவில் 12 மணியை விட்டு கடிகார முள் நகர்ந்ததும் 'வேதாளம்' படத்தின் டீசர் யு டியூபில் வெளியானது. அடுத்த சில நிமிடங்களிலேயே டீசர் ஹிட்ஸ்-ஐயும், லைக்குகளையும் விறுவிறுவென உயர்த்திக் கொண்டே சென்றார்கள் அஜித் ரசிகர்கள். வினாடிக்கு வினாடி விறுவிறுவென அது ஏறிக் கொண்டேயிருந்தது.
டீசர் வெளியான 10 நிமிடங்களுக்குள் 1 லட்சம் ஹிட்ஸைத் தாண்டியது. 15 நிமிடங்களில் 1,50,000, 20 நிமிடங்களில் 2,00,000, 30 நிமிடங்களில் 3,00,00, 1 மணி நேரத்திற்குள்ளாக 4,00,000 ஹிட்ஸ் என வேகமாக ஏறிக் கொண்டேயிருந்தது.
அதே போல 30 நிமிடங்களில் 30,000 லைக்குகளையும், 40 நிமிடங்களில் 40,000 லைக்குகளையும், ஒரு மணி நேரத்திற்குள்ளாக 50,000 லைக்குகளையும் அள்ளியது. நள்ளிரவு நேரத்திலும் அஜித் ரசிகர்கள் 'வேதாளம்' டீசரைப் பார்த்து ரசித்து அது சம்பந்தமான வார்த்தைகளை டிவிட்டரில் தொடர்ந்து டிரென்டிங்கில் வைத்திருந்தனர்.
தற்போது வரை ஹிட்ஸ்-ம், லைக்கும் தொடர்ந்து ஏறிக் கொண்டேயிருக்கிறது. 'புலி' டிரைலைர் 1 லட்சம் லைக்குகளைக் கடந்து ஒரு மாதத்திற்குள் புரிந்த சாதனையை 'வேதாளம்' டீசர் ஒரே நாளில் கடந்து சாதனை புரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 10.30 மணி வரை வேதாளம் டீசரை 79,800 பேரும் லைக்கும், 5,77,838 பேரும் பார்த்துள்ளனர். மீண்டும் அஜித் ரசிகர்களே இணைய உலகில் அதிகமாக உள்ளனர் என நிரூபித்துவிட்டனர்.
அதுமட்டுமல்ல டீசரில் அஜித் பேசும் ''தெறிக்கவிடலாமா'' எனும் வசனம் போன்று அஜித் ரசிகர்கள் டீசரை ஹிட்ஸை தெறிக்கவிட்டு கொண்டிருக்கின்றனர்.