தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராஜாராணி படத்தை அடுத்து விஜய்க்காக 2 ஆண்டுகள் காத்திருந்து இப்போது விஜய்யை இயக்கிக்கொண்டிருக்கிறார் அட்லி. இந்த படத்தின் 50 சதவிகிதம படப்பிடிப்பு நடந்து விட்டது. மேலும், இப்படத்தில் காமெடியனாக நடிக்க வடிவேலு உடன்படாததால் அவருக்கு பதிலாக நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆக, விஜய்யுடன் இந்த படத்தில் ஒரு புதிய காமெடி காம்பினேசன் உருவாகியிருக்கிறது.
என்றாலும், இதே படத்தில் இன்னொரு காமெடியனாக இப்போது சந்தானமும் நடிக்கயிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தலைவா படங்களில் சந்தானம் நடித்திருக்கிறார். தற்போது அவர் ஹீரோவாக நடிக்கவே விரும்புவதாக சொன்னாலும், சில அபிமான ஹீரோக்களுடன் காமெடியனாக நடிக்கும் முடிவில்தான் இருக்கிறார்.
அந்த வகையில், அட்லி தனது படத்துக்கு அவரை அழைத்தபோது, உடனே ஓகே சொல்லிவிட்டாராம். முக்கியமாக, இந்த படத்தில் விஜய்யை கலாய்க்கும் காமெடியனாகவே நடிக்கிறாராம் சந்தானம். சாதாரணமாக விஜய்தான் வடிவேலு உள்ளிட்ட தன்னுடன் நடிக்கும் காமெடியன்களை கலாய்ப்பார். ஆனால் இந்த படத்தில் அந்தமாதிரியான காமெடி ட்ராக்காம். இதற்கு விஜய்யும் சம்மதம் சொல்லிவிட்டதால், விரைவில், சந்தானத்தின் கலாய்ப்பு தொடங்கப்போகிறதாம்.