ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சங்க தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ரஜினி தனது ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், கமல் தனது ஆதரவை விஷால் அணிக்கு அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதையடுத்து ரஜினியை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் சரத்குமார் அணி திரைக்குப்பின்னால் இயங்கினாலும் அவர் யாருக்கும் பிடி கொடுக்காமல் கபாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில்,கமல் தங்கள் பக்கம் வந்து விட்டதை அடுத்து ரஜினியை சந்தித்து ஆதரவு கோரிய விஷால் அணியினர், பின்னர் அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்திலேயே பிரஸ்மீட் நடத்தி தங்களது பலத்தை காட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த சரத்குமார் அணியினரும், நாமும் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்திலேயே மீட்டிங் போட்டு தங்களது பலத்தை காட்டுவோம் என்று முடிவு செய்தனர்.
மேலும், சினிமா சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு தனது மண்டபத்தை பணம் வாங்காமலோ அல்லது குறைந்த கட்டணத்திலோ விட்டு வந்த ரஜினிதரப்பு இந்தமுறை, எல்லோரிடமும் வசூலிப்பது போன்றே இவர்களிடமும் வசூலித்துள்ளார்களாம். காரணம், இப்போது இருக்கிற சூழ்நிலையில் சக நடிகர்கள் என்று கருதி தான் கட்டணத்தை விட்டுக்கொடுத்தால் அதையே வேறுமாதிரியாக்கி கமல் அணி, ரஜினி அணி என்றுகூட மாற்றினாலும் மாற்றி விடுவார்கள் என்று உஷாராகி விட்டாராம். அதனால் இந்த விசயத்தில் ரஜினி தலையிடவே இல்லையாம். அவரது கல்யாண மண்டப நிர்வாகிகள் கேட்டபோது, இந்த விசயத்தை என்னிடம் கொண்டு வரவேண்டாம். எல்லோரிடமும் கட்டணம் வசூலிப்பது போன்று இவர்களிடம் நீங்களாகவே வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி நழுவிக்கொண்டாராம்.