ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் அடையாளமாக கடந்த 70 ஆண்டுகளாக் திகழ்ந்து வருகிறது ஏவிஎம் ஸ்டூடியோ. ஒரு இன்ஞ் நிலம் ஒரு கிராம் தங்கத்துக்கு சமம் என்கிற வகையில் நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில் நகரின் மைய பகுதியில் உள்ள கடல் போன்ற இடத்தை இப்போதும் குறைந்த வருவாய் வந்த போதும் சினிமாவுக்கே கொடுத்து வருகிற நிறுவனம். 170 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள நிறுவனம். ஆசியாவிலேயே பழம்பெரும் சினிமா ஸ்டூடியோ. ஏவிஎம் நிறுவனம் தொடங்கி 70 ஆண்டுகள் ஆகிறது.
இதையொட்டி ஏவி.மெய்யப்ப செட்டியார் எழுதிய எனது வாழ்க்கை அனுபவங்கள் என்ற நூல் மை எக்ஸ்பீரியன்ஸ் இன் லைப் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. வருகிற 14ந் தேதி வடபழனி ஏவிஎம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடக்கும் விழாவிற்கு இந்து பத்திரிக்கை ஆசிரியர் என்.ராம் தலைமை தாங்குகிறார். பாரதிய வித்யா பவனின் கோவை மண்டல தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ வானவராயர் வெளியிடுகிறார். நடிகர் பிரபு பெற்றுக் கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஏவிஎம் நிறுவனம் செய்து வருகிறது.