ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'வீரம்' சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் 'வேதாளம்' படத்தின் டீசர் இன்றிரவு வெளியாக உள்ளது. இதற்கான அறிவிப்பை சோனி மியூசிக்கின் தென்னிந்தியப் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.
கடந்த வாரமே 'வேதாளம்' படத்தின் டீசர் வெளியாகும் என்று அஜித் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அது தள்ளி வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக 'வேதாளம்' பட டீசரின் தீம் மியூசிக் என்ற ஒரு இசை வடிவம் இணையங்களில் பரவலாகப் பரவியது. இதனிடையே இன்று நள்ளிரவு வழக்கம் போல 12 மணிக்கு 'வேதாளம்' படத்தின் டீசரை வெளியிட உள்ளோம் என அறிவித்துள்ளார்கள்.
ஏற்கெனவே 'புலி' படத்தின் டீசரும், டிரைலரும் மிகப் பெரிய சாதனை புரிந்துள்ள நிலையில் 'வேதாளம்' படத்தின் டீசரை அதைவிட சாதனை புரிய வைக்கும் அளவிற்கு அஜித் ரசிகர்கள் இந்த நிமிடத்திலிருந்தே தயாராகிவிட்டார்கள்.
வேதாளம் ஆட்டம் ஆரம்பம்....!