Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோயிசத்துக்கு மாறிய பிரபுசாலமன்!

07 அக், 2015 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Prabhu-Solomon-turns-to-heroism

ஆரம்பத்தில் விக்ரமை வைத்து கிங், கரண் நடிப்பில் கொக்கி, சிபிராஜ் நடித்த லீ என ஹீரோயிசம் கொண்ட படங்களாக இயக்கியவர் பிரபுசாலமன். ஆனால் அப்படி அவர் இயக்கிய படங்கள் எதிர்பார்த்தபடி ஹிட் கொடுக்கவில்லை. அதனால் சரியான தயாரிப்பாளர் கிடைக்காமல் மைனா படத்தை குறைந்த முதலீட்டில் அப்போதைய புதுமுக நடிகர் விதார்த்தை வைத்து தொடங்கினார் பிரபுசாலமன். சிந்துசமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்திருந்த அமலாபாலை நாயகியாக்கினார்.


ஆனால் ஹீரோயிசத்தை மையமாக கொண்டு அவர் இயக்கிய படங்கள் எதுவும் ஓடாத நிலையில், புதுமுக நடிகரை வைத்து இயக்கிய மைனா சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகே பிரபுசாலமன் என்றொரு இயக்குனர் வெளியில் தெரிய ஆரம்பித்தார். பின்னர் விக்ரம் பிரபுவை வைத்து கும்கி படத்தை இயக்கிய அவர், கயல் படத்திலும் சந்திரன் என்ற புதுமுக நடிகரையே நாயகனாக நடிக்க வைத்தார். ஆனால் அவர் புதுமுக ஹீரோக்களை வைத்து இயக்கிய இரண்டு படங்கள் ஓடிய நிலையில், மூன்றாவதாக இயக்கிய படம் ஓடவில்லை. அதனால் மறுபடியும் தனது ரூட்டை ஹீரோயிசத்து பக்கம் திருப்பிவிட்டார்.


தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள பெயரிடப்படாத படத்தை இயக்கியுள்ளார் பிரபுசாலமன். முழுக்க முழுக்க ரயிலுக்குள் நடந்து முடிந்துள்ள இந்த படத்தில் தனுசுடன் கீர்த்தி சுரேஷ், தம்பி ராமைய்யா, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், அடுத்தபடியாகவும் ஒரு பிரபல நடிகருக்கான கதையை ரெடி பண்ணியுள்ள பிரபுசாலமன், கதை சொல்லி ஓகே பண்ணி விட்டதாக சொல்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in