'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தான் இயக்கும் படத்துக்கு சொந்தமாக தலைப்பு யோசிக்கும் அளவுக்குக் கூட இன்றைய இயக்குநர்கள் விஷயதாரிகளாக இல்லை. எனவே ஏற்கனவே வெளியாகி வெற்றியடைந்த படங்களின் பெயர்களை தங்களின் படங்களுக்கு சூட்டும் அளவுக்கு கற்பனை வறண்டுகிடக்கிறார்கள். அதனால் தமிழ் சினிமாவில் தற்போது தலைப்புப் பிரச்சனை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களுக்கு ஏற்கெனவே வெளியான பழைய படங்களுக்கு வைக்கப்பட்ட தலைப்புகளை மீண்டும் வைக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்தக் கொடுமை போதாது என்று இன்னொரு கொடுமையும் நடக்கிறது. ஒரே தலைப்பை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வைப்பதும் அதை வைத்து சண்டைபோடுவதும்தான். தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு 'புரூஸ் லீ' என பெயர் சூட்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். தமிழ் புரூஸ் லீ வெளிவந்த சில நாட்களிலேயே தெலுங்கில் ராம்சரண், ராகுல் ப்ரீத் சிங், கீர்த்தி கர்பந்தா நடிக்கும் படத்திற்கும் 'புரூஸ் லீ' என பெயர் வைத்து, அதன் போஸ்டரையும் வெளியிட்டார்கள்.
ராம்சரண் நடிக்கும் தெலுங்குப்படங்களை தமிழில் டப் செய்பவர்கள் தெலுங்கு புருஸ்லீ படத்தை தமிழில் 'புரூஸ் லீ- 2' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இந்த இரண்டு 'புரூஸ் லீ' படங்கள் போதாதென்று மூன்றாவதாக இன்னொரு படத்துக்கும் 'புரூஸ் லீ' என பெயர் வைத்துள்ளனர். இயக்குனர் ராம் கோபால் வர்மா, கதாநாயகியை மையமாக வைத்து ஹிந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் பெயரும் 'புரூஸ் லீ. ராம்கோபால் வர்மாவின் படம் தெலுங்கு மற்றும் தமிழில் நிச்சயம் டப் செய்து வெளியடப்படும்.
ஒருவேளை லேடி புருஸ்லீ என பெயர் வைப்பார்களோ என்னவோ?