ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை அனுஷ்கா நடித்து வரும் சரித்திர திரைப்படமான ருத்ரமாதேவி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. 3D தொழில்நுட்பத்தில் உருவாகிவுள்ள இப்படத்தை இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்ய மேனன், நித்யா மேனன், கேத்ரின் திரேஷா போன்றோரும் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஏற்றுள்ள கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
ருத்ரமாதேவி படத்தில் அல்லு அர்ஜுன், கோன கண்ணா ரெட்டி எனும் மிரட்டலான போர் வீரனாக நடித்துள்ளார். இப்படத்தில் கம்பீரமாக தோன்றும் அல்லு அர்ஜுனின் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன. அல்லு அர்ஜுன் 50 நிமிடங்கள் இப்படத்தில் தோன்றுவாராம். அதிலும் கம்பீரமான போர் வீரனாகவே பல காட்சிகளில் அல்லு அர்ஜுன் நடித்துள்ளாராம். குறிப்பாக அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு அதிரடியான விஷுவல் விருந்தாக அமையும் என குணசேகர் கூறியுள்ளார்.