நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
இந்த வருடத்தில் இன்றைய தேதி வரை மம்முட்டி நடித்த நான்கு படங்கள் ரிலீசாகிவிட்டன. அதில் முதல் இரண்டும் ஹிட். பின்னர் இரண்டும் பிளாப் என்கிற சரிசம கணக்குடன் ஐந்தாவது படமான 'பாதமாறி' சில பல தேதி மாற்றங்களுக்குப்பின் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. படத்தின் இயக்குனர் சலீம் அஹமது தேசியவிருது பெற்ற இயக்குனர் என்பதால் ரசிகர்கள் இதையும் விருதுப்பட கணக்கில் எடுத்துக்கொண்டு தியேட்டருக்கு வர தயங்குவார்களோ என்கிற சந்தேகம் அவருக்கும் இருந்தது. அதனால் தான் இது விருதை குறிவைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல.. கமர்ஷியலான படம் தான் என்பதை ரிலீசுக்கு மூன்று நாட்கள் முன்னதாக பகிரங்கமாக கூறியுள்ளார்.
ஆனால் தற்போது விருதுப்படங்களை பற்றிய கண்ணோட்டம் ரசிகர்களின் மனதில் மாறிவருகிறது. மேலும் இந்த வருடம் ஆஸ்கார் ரேஸில் எப்படியும் நுழைந்துவிட வேண்டும் என கடைசி ரவுண்டு வரை போட்டிபோட்ட இந்த 'பாதமாறி' திரைப்படம் மயிரிழையில் அந்த வாய்ப்பை நழுவவிட்டதும் கூட இந்தப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்துள்ளது. கேரளாவை பொறுத்தவரை கல்ப் நாடுகள் எனப்படும் அரபுநாடுகளுக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக வேலை தேடிச்செல்வோரின் பயணத்தையும் அதில் உள்ள வலியையும் இந்தப்படம் உரக்க சொல்கிறதாம்.. இந்தப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.