ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நல்ல இயக்குனரும்கூட. அவர் இயக்கிய படங்கள் விருதுகளையும் வென்று இருக்கிறது. விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது. மல்லி, டெரரிஸ்ட், உருமி, இனம் படங்களை இயக்கினார். இதில் உருமி மலையாளத்தில் கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம்.
தற்போது அவர் லைஸ் பி டெல் என்ற ஆங்கிலப் படத்தை இயக்கி வருகிறார். அதில் பிரபல ஆங்கில நடிகர் ஹார்வி கைய்டல், கேப்ரியல் பைன் ஆகியோருடன் இந்தி நடிகர் ஓம்புரி, வங்காள நடிகை எமிலி உள்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது லண்டனில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருப்பதாகவும், அடுத்த ஆண்டு வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.