Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனிகோ பிரபாகரனுக்கு கைகொடுப்பாரா வீரய்யன்

06 அக், 2015 - 14:02 IST
எழுத்தின் அளவு:
Will-Veeraiyan-give-success-to-Iniko-Prabakaran

சென்னை 28 படத்தில் அறிமுகமான ஜெய், மிர்ஷி சிவா, விஜய் வசந்த், பிரேம்ஜிகூட பிரபலமாகிவிட்டார்கள். ஆனால் இவர்களுடன் அறிமுகமான இனிகோ பிரபாகரன் மட்டும் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்.


சரோஜா, பூ, சுந்தர பாண்டியன் படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அது கேரக்டராக பார்க்கப்பட்டதே தவிர இனிகோ பிரபாகரன் தெரியாமல் போய்விட்டார். அழகர்சாமியின் குதிரை படத்தில் இவர்தான் ஹீரோ ஆனால் விருதையும், புகழையும் அப்புக்குட்டி தட்டிச் சென்று விட்டதால் இவர் வெளிவரவில்லை. அடுத்து ரம்மி படத்தில் விஜய் சேதுபதியுடன் இன்னொரு ஹீரோவாக நடித்தார். படத்தின் தோல்வியால் அதுவும் கைகொடுக்கவில்லை.


தற்போது வீரய்யன் என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்த ஷைனி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் கயல் வின்செண்ட், இயக்குனர் ரமேஷ் கண்ணாவின் மகன் தென்னவன், ஆரண்யகாண்டம் வசந்த் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். பஃரித் என்ற புதுமுகம் இயக்குகிறார். 1990களில் தஞ்சை மாவட்டத்தை பின்புலமாக கொண்டு நடக்கும் கதை. வீரய்யனாவது இனிகோ பிரபாகரனுக்கு கைகொடுப்பாரா என்று பார்க்கலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in