பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
திடீர் நெஞ்சுவலி காரணமாக கன்னட நடிகர் சிவராஜ்குமார்(வயது 54) பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த கன்னட சூப்பர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார். இவரும் கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். சமீபத்தில் தான் இவரது மகளின் திருமணம் மிகவும் ஆடம்பரமாய் நடந்து முடிந்தது. தற்போது ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் கில்லிங் வீரப்பன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் வீரப்பனை கொல்லும் அதிகாரியாக ராஜ்குமார் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் ராஜ்குமார் வழக்கம் போல இன்று காலை ஜிம்மிற்கு சென்று வீடு திரும்பி உள்ளார். வரும்வழியில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு நினைவை இழந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியா பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.