ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை புரட்டிப்போட்ட படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அதற்கு முன்பு அவர் நடித்த எதிர்நீச்சல் ஓரளவு வசூலித்திருந்த நிலையில் இந்த படம் எதிர்பாராத வசூலை குவித்தது. அதனால் சிவகார்த்திகேயனின் வியாபார வட்டம் விரிந்தது. அதன்பிறகு அவர் நடித்த மான்கராத்தே, காக்கி சட்டை போன்ற படங்கள் மெகா பட்ஜெட்டில் தயாராகின. அதனால் சிவகார்த்திகேயனின் கால்சீட்டுக்காக மெகா பட நிறுவனங்களே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதோடு, மார்க்கெட்டில் அவர் வேகமாக வளர்ந்து வந்ததால் முன்வரிசையில் இருக்கும் சில ஹீரோக்களுக்கு, சிவகார்த்திகேயன் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்கிற அச்சமும் உள்ளூர ஏற்பட்டது.
இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ரஜினிமுருகன் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். இந்த படம் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்த்தார். ஆனால் சிவகார்த்திகேயன் பெரிய அளவில் எதிர்பார்த்த அந்த படம், இப்போது திரைக்கு வரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து, திரைக்கு வர முடியாமல் கிடக்கும் பூலோகம், விஸ்வரூபம்-2, மதகஜராஜா உள்ளிட்ட சில படங்களை சுட்டிக்காட்டி, அந்த பட்டியலில் ரஜினிமுருகனையும் இணைத்து பேசுகிறார்களாம். இதனால் ஏற்கனவே மதுரை சம்பவத்தால் மனதளவில் கலவரத்தில் இருந்து வரும் சிவகார்த்திகேயன், அடி மேல் அடி விழுவதைப்பார்த்து பலத்த அதிர்ச்சியில் இருக்கிறாராம்.