'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கமல்ஹாசன், திரையுலகத்தில் சகலகலா வல்லவன் என அழைக்கப்படுபவர். எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை தமிழ்த் திரையுலகத்தில் புகுத்துபவர். டிடிஎஸ், டிஜிட்டல் சினிமா, ஆரோ ஒலி, என பல விஷயங்களை தமிழ்த் திரையுலகத்தில் முதலில் கொண்டு வந்தவர். அவர் நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். அப்படியே அவர் நடித்த படங்களை இயக்கினாலும் கமல்ஹாசன் அந்தப் படங்களில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் மற்ற விஷயங்களையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். அதையும் மீறி கமல்ஹாசன் நடித்த பல படங்களில் இயக்குனர் என்ற பெயர் சும்மாகத்தான் இருக்கும், அனைத்து விஷயங்களையும் கமல்ஹாசனே செய்து முடித்துவிடுவார் என்ற பேச்சும் திரையுலகத்தில் உண்டு. இதற்கு ஒரு சில இயக்குனர்கள் மட்டும் விதிவிலக்கு.
கமல்ஹாசன் தற்போது நடித்து முடித்துள்ள 'தூங்காவனம்' படத்தை அவருடைய உதவியாளரான ராஜேஷ் எம் செல்வா தான் இயக்கியிருக்கிறார். இருந்தாலும் படத்தில் கமல்ஹாசன் தங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்ததாகவே படத்தில் நடித்துள்ள இரண்டு முக்கியமான ஹீரோயின்கள் ஏற்கெனவே அவர்களது பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்கள். த்ரிஷாவுக்கு தமிழில் சொந்தக் குரலில் பேச கமல்ஹாசன் தான் கூடவே இருந்து பயிற்சி கொடுத்தார் என புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின. தற்போது படத்தில் மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் மதுஷாலினியும் தனக்கு கமல்ஹாசன் நடிப்பு சொல்லிக் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால் படத்தின் இயக்குனருக்கு என்ன வேலை என்றுதானே கேட்கிறீர்கள். படம் வந்தால் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்...!!