பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் சல்மான் கானும் ஒருவர். அதுமட்டுமின்றி பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரும் இவர் தான். படங்களில் மட்டுமன்றி, விளம்பரம், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடிக்கிறார். இதனால் கணிசமான தொகையை சம்பளமாக பெறுகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சல்மானின் சம்பளம் எவ்வளவு என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு சல்மான் கான், ''மற்றவர்கள் சம்பளம் எவ்வளவு என்று அறிய நான் விரும்பவில்லை, பின்னர் எதற்காக எனது சம்பளத்தை அறிய விரும்புகின்றனர். எனது சம்பளம் உயர்ந்தாலும், அதை நான் 'பீயிங் ஹூயூமன்' அறக்கட்டளைக்கு தான் செலவிட போகிறேன், அது ஒரு நல்ல காரியத்திற்கு செலவிடப்படும்'' என்று கூறியுள்ளார்.