இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெளியான படங்களில் சாதனைப்படம் என்றால் அது பாகுபலி படம்தான். மற்ற படங்கள் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் பாகுபலி படம்தான் பல்வேலறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி' படங்ம வெளியான நாள் முதலே ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறது!
உலகம் முழுக்க பல நாடுகளில் வெளியான பாகுபலி படம் இதுவரை 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையைத் தொடர்ந்து அடுத்த சாதனையை செய்யும் வகையில் 'பாகுபலி' படம் விரைவில் சீனாவிலும் ரிலீசாகவிருக்கிறது. அமீர்கான் நடித்த 'பீகே' திரைப்படத்தை சீனாவில் வாங்கி வெளியிட்ட 'E-Star' என்ற பட நிறுவனம்தான் 'பாகுபலி' படத்தையும் சீனாவில் வெளியிட இருக்கிறது. அதற்கான வேலைகள் தற்போதுவிறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'பாகுபலி'படம் குறித்து மற்றுமொரு புதிய செய்தி. என்ன செய்தி? சீனாவை தொடர்ந்து 'பாகுபலி' திரைப்படம் விரைவில் ஜப்பானிலும் வெளியாகவிருக்கிறது. ஜப்பானில் இப்படத்தை விநியோகிக்கும் உரிமையை ஜப்பானிலுள்ள 'Twin Co' என்றபட நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தத் தகவலை 'பாகுபலி' பட இயக்குநர் ராஜமௌலியே தெரிவித்துள்ளார். சீனா மற்றும் ஜப்பானில் பாகுபலி படம் வெற்றியடைந்தால் அப்படத்தின் வசூல் புதிய எல்லையைத் தொடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.