இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்து வரும் ப்ரூஸ் லீ திரைப்படம் தமிழில் ப்ரூஸ் லீ 2 என்ற பெயரில் வெளிவரவுள்ளது. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கும் ப்ரூஸ் லீ படத்தில் ராம் சரண் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீடு அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்றது. மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். இந்நிலையில் ப்ரூஸ் லீ படத்தின் தமிழ் பதிப்பை வெளியிடும் பத்ரகாளி பிரசாத் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகின்றாராம். வரும் அக்டோபர் 7 ஆம் தேதி ப்ரூஸ் லீ 2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் நடிகர் ராம் சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் அக்டோபர் 16 ஆம் தேதி திரைக்கு வரும் ப்ரூஸ் லீ படம் அதே நாளில் தமிழில் ப்ரூஸ் லீ 2 என்ற பெயரில் வெளிவரவுள்ளது.