ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
தெலுங்கில் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம் படத்திற்கு பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு பிரபுதேவாவை திருமணம் செய்ய தயாராகிக்கொண்டிருந்த நயன்தாரா, பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் திருமணம் நடக்கயிருந்த கடைசி நேரத்தில் அவரை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் பிரவேசித்தார். எதிர்நீச்சல் படத்தில் தனுசுடன் ஒரு பாடலில் நடனமாடியவர், ராஜாராணி படத்தில் ஆர்யாவுடன் அஜீத்தின் ஆரம்பம் படத்தில் கமிட்டானார். இப்படியாக மறுபடியும் மார்க்கெட்டைப் பிடித்த நயன்தாராவுக்கு அனாமிகா, நண்பேன்டா, மாஸ் உள்ளிட்ட படங்கள் சரிவைக் கொடுத்தபோதும், சமீபத்தில் வெளியான தனிஒருவன், மாயா என்ற இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதனால் மறுபடியும் நயன்தாராவின் மார்க்கெட் சூடுபிடித்துள்ளது.
அதோடு, இனிமேல் விஜய்யுடனெல்லாம் நயன்தாரா ஜோடி சேர வாய்ப்பே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அட்லி இயக்கும் படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 60வது படத்தில் விஜய்யுடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா. ஏற்கனவே விஜய் நடித்த சிவகாசி படத்தில் கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக் கேட்க வாரியா என்ற பாடலில் விஜய்யுடன் குத்தாட்டமாடிய நயன்தாரா, பின்னர் பிரபுதேவா இயக்கத்தில், விஜய் நடித்த வில்லு படத்தில் ஜோடியாகவும் நடித்தார். ஆனால் அதன்பிறகு அவர்கள் இணையவில்லை. இந்தநிலையில், தற்போது மீண்டும் விஜய்யுடன் இணையப்போகிறார். அதோடு இந்த படத்தின் டைட்டீல் கார்டில் நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் சூட்டவும் முடிவெடுத்துள்ளாராம் டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா.