Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

லைப் ஆப் பை கிராபிக்ஸ் குழுவினரின் கைவண்ணத்தில் உருவான 'LL7K'..!

05 அக், 2015 - 14:21 IST
எழுத்தின் அளவு:
Life-of-pie-team-in-LL7K

வரும் வாரத்தில் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் 'லார்டு லிவிங்ஸ்டோன் 7௦௦௦ கண்டி' (LL7K) என்கிற படத்திற்கு, அதன் மிக நீளமான வித்தியாசமான பெயர் மட்டுமே அதன்மீதான எதிர்பார்ப்பை பாதிக்கும் மேல் அதிகப்படுத்தியுள்ளது என்பது நூறு சதவீதம் உண்மை.. ஆனால் படத்தில் இன்னும் ஆச்சர்யமான விஷயங்கள் ஒளிந்துள்ளன. இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், பரத், சன்னி வெய்ன், நெடுமுடிவேணு, ரீனு மேத்யூஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருப்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்.. இதன் டிரைலரை பலூனில் கட்டி விண்வெளியில் பறக்கவிட்டு ரிலீஸ் செய்ததும் ஏற்கனவே கேட்டு பிரமித்த விஷயம் தான்.


ஆனால், இந்தப்படத்தின் இயக்குனரான அணில் ராதாகிருஷ்ணன் மேனன் தனது முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியவர் என்பது பலருக்கு தெரிந்திருக்கவில்லை வாய்ப்பில்லை. தவிர இந்தப்படம் முழுவதும் காட்டுப்பகுதியிலேயே எடுக்கப்பட்டுள்ளது.. அதுவும் எப்படி..? கடல் மட்டத்திற்கு மேல் 67௦௦ அடி உயரத்தில் படமாக்கப்பட்ட முதல் மலையாளப்படம் இதுதான் என்பது ஹைலைட். மேலும் இந்தப்படத்தில் வி.எப்.எக்ஸ் பணிக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறதாம். ரசிகர்களின் மனதை அள்ளிய லைப் ஆப் பை' படத்திற்கு பணியாற்றிய வி.எப்.எக்ஸ் டீம் தான் இந்தப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை திறம்பட மேற்கொண்டிருக்கிறது.. ஆக வரும் வாரம் காட்டுக்குள் ஒரு த்ரில் பயணம் மேற்கொள்ள தயாராகுங்கள் ரசிகர்களே..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in