ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களின் நடிப்பில், சிம்புத்தேவனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் புலி. பேண்டஷி படமாக வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக விஜய் உள்ளிட்ட ரசிகர்களையே படம் பூர்த்தி செய்யவில்லை என்றும், அதேசமயம் குழந்தைகளை மையமாக வைத்து படம் வெளியாகி இருக்கிறது என்று விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இந்தச்சூழலில் புலி படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
ரஜினி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பிலல்,புலி படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இது மிகவும் பாராட்டவேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன. படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள். விஜய்யின் நடிப்பு என்ன ஈர்த்தது, விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது.
ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள
படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. ஹேட்ஸ் ஆப் டூ புலி டீம் என்று ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.