ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடித்த அனேகன் படத்தில் நாயகியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். அந்த படத்திற்கு பிறகு தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று நினைத்தனர். ஆனால் அமைராவின் நடிப்பு பெரிதாக கோலிவுட் டைரக்டர்களை கவரவில்லை. அதனால் ஒரே படத்தோடு மும்பைக்கு திரும்பிவிட்ட அவர் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்தநிலையில், தெலுங்கில் அனேகுடு என்ற பெயரில் வெளியான அனேகன் படமும் அங்கே பெரிதாக வசூலிக்கவில்லை. அதனால் அமைராவின் தெலுங்கு சினிமா முயற்சியும் பலனளிக்கவில்லை. இருப்பினும், தெலுங்கு படங்களில் நடிக்க தொடர்ந்து முயற்சித்து வந்த அமைரா தஸ்தூர், இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகும் தனி ஒருவன் படத்தில் நயன்தாரா நடித்த வேடத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
தமிழில் ஜெயம்ரவி நடித்த வேடத்தில் தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமைரா தஸ்தூர் நடிக்கும் இந்த படத்தை தமிழில் அப்படத்தை இயக்கிய மோகன்ராஜாவே இயக்குவார் என்று முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது ராம்சரணின் பேவரிட் இயக்குனர்களில் ஒருவரான சுரேந்தர் ரெட்டி இயக்குவதாக கூறப்படுகிறது.