ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு |
ஆசியத் திரையுலகத்திலிருந்து ஹாலிவுட் திரையுலகம் வரை புகழ் பெற்ற ஆக்ஷன் ஹீரோவான ஜாக்கி சான் தற்போது 'குங்பு யோகா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஜாக்கி சானை வைத்து 'தி மித்' படத்தை இயக்கிய ஸ்டான்லி டாங் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு துபாயில் ஆரம்பமானது.
இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இந்திய நடிகையான இலியானாவும், முக்கிய வில்லனாக நடிகர் சோனு சூட்டும் நடிக்கிறார்கள். ஸ்டான்லி டாங் இயக்கி 'தி மித்' படத்தில் ஏற்கெனவே ஹிந்தித் திரையுலகின் கிளாமர் குயின் மல்லிகா ஷெராவத் நடித்திருந்தார். அவருக்கடுத்து தற்போது இலியானா ஜாக்கி சான் படத்தில் நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு முதலில் காத்ரீனா கைப்பைத்தான் கேட்டிருந்தார்கள். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக காத்ரீனா அந்தப் படத்தில் நடிக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு இலியானாவிற்கு கிடைத்திருக்கிறது.
தமிழில் 'கேடி', விஜய் ஜோடியாக 'நண்பன்' படங்களிலும் தெலுங்கில் பல வெற்றிப் படங்களிலும், ஹிந்தியில் 'பார்ஃபி, மெயின் தேரா ஹீரோ, ஹேப்பி என்டிங்' ஆகிய படங்களில் இலியானா நடித்துள்ளார். ஆனால், ஜாக்கி சான் படத்தில் நடிப்பது பற்றி இதுவரை இலியானா தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியிடப்படவில்லை.