Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பைலட்டாக ஆசைப்பட்டேன்; ஆனால், சினிமாவுக்கு வந்துட்டேன் - அதர்வா!

05 அக், 2015 - 00:21 IST
எழுத்தின் அளவு:
"I-wanted-to-be-a-pilot;-But-I-am-here-to-film-says-Atharva

இதயம் முரளியின் இனிய வாரிசு... தான் நடிக்கும் படங்களிலெல்லாம், தன்னையே செதுக்கி கொள்ளும் அபூர்வ நடிகர். விரைவில் வெளிவர உள்ள, ஈட்டி படம் தொடர்பாக, அதர்வா அளித்த பேட்டி:


ஈட்டி பட அனுபவம் எப்படி?


இது ஒரு விளையாட்டு வீரனின் கதை. தஞ்சாவூரில் இருந்து சென்னை வரும் போது, அவன் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக கொண்டது. இந்தப் படம், எனக்கு ஒரு இனிய அனுபவம் என்றே சொல்வேன்.


படத்திற்காக நிறைய ஓட்டப்பயிற்சி எடுத்திருக்கீங்க போல?


இயக்குனர் ரவிஅரசு, கதை சொல்லும் போதே, இந்த கேரக்டர் பற்றி சொன்னார். கதைக்கேற்ப என்னை மாற்றினால் தான், சரியாக இருக்கும் என நினைத்தேன். சென்னை, பாரீசில் வசிக்கும், கோச்சர் நாகராஜ், காமன்வெல்த் விளையாட்டு போட்டி வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பவர். அவரிடம், மூன்று மாதங்கள் கடும் பயிற்சி எடுத்தேன். அவர், என்னை ஒரு அதலெட்டிக் வீரராகவே மாற்றினார்.


பயிற்சியோடு, கடுமையான, டயட்டில் இருந்தேன். கிட்டத்தட்ட ஓராண்டு, சாப்பாடே தொடவில்லை. வெறும் பழங்கள், வேக வைத்த காய்கறிகள் தான் சாப்பிட்டேன். சிக்ஸ் பேக் வைக்க ரொம்ப சிரமப்பட்டேன். என் உடம்புக்கு ஏற்ற மாதிரி சாப்பாட்டை குறைத்து, முழு அதலெட்டிக்காகவே, நான் மாறிவிட்டேன்.


நீங்கள் நடிக்கும் கதையை யாரிடம், டிஸ்கஸ் பண்ணுவீங்க?


நான் தான் கதை கேட்பேன். கதை பிடித்து போனால், உடனே நடிக்க ஒப்புக் கொள்வேன். பெரும்பாலும் ஒரு படக்கதை போல, இன்னொரு கதை வராமல் பார்த்துக் கொள்வேன். மற்றபடி யாரிடமும், டிஸ்கஸ் பண்ணமாட்டேன்.


ரொமான்ஸ், டான்ஸ், ஆக் ஷன்... எது ரொம்ப சுலபமா இருக்கு; எது ரொம்ப கடினமா இருக்கு?


எதிலுமே நான், பர்பெக்டா இல்லைன்னு நினைக்கிறேன். தினம் தினம், நானே ஒவ்வொன்னா தெரிஞ்சிட்டு வர்றேன். என்னை பொறுத்தவரை, எல்லாத்தையும் கத்துக்கவே ஆசைப்படுறேன்.


இயக்குனர் பாலா, உங்க வாழ்க்கையில் எவ்ளோ முக்கியமா இருக்கார்?


நான் அவரோடு படம் பண்ணினாலும், பண்ணலனாலும், தினமும் பேசிக் கொண்டு தான் இருக்கேன். எனக்கு சரியான ஆசிரியரா இருக்கார். பரதேசி படம், என் சினிமா கேரியரில் முக்கியமான படம். அவர் தயாரித்த படம் தான் சண்டிவீரன். அவரோடு வேலை பார்த்த, அத்தனை நடிகர்களிடமும் அன்பாக பழகுவார்; ரொம்பவும் மரியாதைக்குரியவர் பாலா.


புது இயக்குனர்கள், பழைய இயக்குனர்கள், யாரிடம் வேலை பார்ப்பது எளிது?


நான் அப்படி பார்ப்பதில்லை; அனைவரிடமும் வேலை பார்க்க ஆசைப்படுகிறேன். புதியவர்கள் பயங்கர திறமைசாலியா, வித்தியாசமான கதைகளா எடுத்து வர்றாங்க. சமீப கால படங்கள், தமிழ் சினிமாவில், ஒரு புதிய பாதையை காட்டியிருக்குன்னு நினைக்கிறேன்.


சினிமாவில் நீங்க யாரை பின் தொடருவீங்க?


கமல், ஆர்யா, விக்ரம்...; இவங்க எல்லாருமே என் இன்ஸ்பிரேஷன். கமல் சார் படம் ஒவ்வொன்றும், எனக்கு ஒவ்வொரு பாடமாக இருக்கு; நான் நடிக்க வரும்போது முதலில் பார்த்த நபர் அவர் தான்.


தமிழ் சினிமாவில், இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது வழக்கமாகி வருகிறது. உங்களுக்கு அப்படி எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க ஆசை?


இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது ஆரோக்கியமான விஷயம் தான். எனக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும்; அவரோடு ஒரு படம் நடிக்க ஆசையா இருக்கு.


உங்கள் அப்பாவின் படங்களில், உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது எது?


இரணியன் படம், அப்பாவின் மடியில் உட்கார்ந்து பார்த்திருக்கேன். அப்பாவை சாகடிக்கும் காட்சி வரும் போதெல்லாமல் கண்ணீர் விட்டு அழுதிருக்கேன். அதன் பின், பொற்காலம் படம் பிடித்தது.


அப்பா சொன்ன அறிவுரைகளில், எதை எல்லாம் கடைப்பிடிக்கிறீங்க?


நீ உன்னை நம்பு; பின் அடுத்தவரை நம்பு என்று சொல்வார். உனக்கு மனதில் பட்டதை செய். நான் சொல்வதை கூட நல்லா யோசித்து, உனக்கு சரின்னு பட்டா செய் என சொல்வார்.


உங்களைப் பற்றி, கிசு கிசு வந்தால், உங்கள் அம்மா கோபப்படுவார்களா?


அப்பா, இந்த துறையில் தான் இருந்திருக்கார். அதனால், அம்மாவுக்கு சினிமா பற்றி நல்லா தெரியும். எந்த செய்தியாக இருந்தாலும், அவங்ககிட்ட இருந்து எந்த, ரியாக் ஷனும் வராது.


சமந்தா, ப்ரியா ஆனந்த், ஆனந்தி இவர்களில் யார் உங்களுக்கு ரொம்ப நெருக்கமான தோழி?


எல்லாருமே எனக்கு நல்ல, பிரண்ட்ஸ் தான்.


யாரையோ, லவ் பண்ணுறீங்களாமே?


யாரை லவ் பண்றேன்னு எனக்கு தெரியல... நீங்களாவது சொல்லுங்க, என் லவ்வர் யாருன்னு...


எந்த மாதிரியான மனைவி வர வேண்டும் என்று நினைக்கிறீங்க?


எப்பவும் என்னை புரிஞ்சிக்கிட்டு, ஜாலியாக இருக்க வேண்டும்; என் குடும்பத்தினரிடமும், என்னைச் சுற்றி இருப்பவர்களிடமும் அன்பு செலுத்தி, அனைவரையும் நன்றாக பார்த்து கொள்ளும் பெண்ணாக இருக்க வேண்டும். அதற்கு பின் தான் அழகு, கலர் எல்லாமே.


நடிகர் சங்க தேர்தலில் நீங்க யார் பக்கம்?


தேர்தல் அன்று, யார் நல்லது செய்வாங்கன்னு, என் மனதில் தோணுதோ அவங்களுக்கு ஓட்டு போடுவேன். கண்டிப்பா தேர்தலில் ஓட்டு போடுவேன்; யாருக்கு என்பது ரகசியம்.


நீங்க நடிகராகாவிட்டால்?


நான் சினிமாவுக்கு வர விருப்பமில்லாமல் தான் இருந்தேன். ஏன்னா, கொஞ்சம் உடல் சதை போட்டு, நடிகன் என்ற எல்லைக்குள்ளேயே நான் இல்லை. வீட்டில் உள்ளவர்கள் ஆசைப்பட்டனர். நான் சினிமாவுக்கு வர வேண்டும் என்பது, என் தாத்தாவின் ஆசை. இன்ஜினியரிங் படிப்பை முடித்ததும், கேமரா பயத்தை துாக்கிபோட்டு, படிப்பு பக்கம் போகாமல், நடிப்பு பக்கம் வந்து விட்டேன். பைலட் ஆக வேண்டும் என்பதே, என் உண்மையான ஆசை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in