சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
அழகிய பாண்டிபுரம் படத்தில் அறிமுகமானவர் அஞ்சனா கீர்த்தி, அதன் பிறகு திறந்திடு தீசே, கானகம், ஜம்புலிங்கம் படங்களில் நடித்துள்ளார். அஞ்சனா நடித்துள்ள அந்தாதி படம் வருகிற 9ந் தேதி வெளிவருகிறது.
க்ரைம் த்ரில்லர் வகையான இந்தப் படத்தில் அஞ்சனாவின் நடிப்பு பேசப்படுவதாத இருக்கும் என்கிறார்கள். இதில் அஞ்சனாவுடன் அர்ஜுன் விஜயராகவன் நடித்துள்ளார். இவர்கள் தவிர சத்யா ஜெகன்னாதன், கார்த்திக் நாகராஜன், பார்கவ் சக்ரவர்த்தி, நிழல்கள்ரவி ஆகியோரும் நடித்துள்ளனர். டேவட்ராப் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தை ரமேஷ் வெங்கட்ராம் இயக்கி உள்ளார், சமந்த் இசை அமைத்துள்ளார், சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜம்புலிங்கம் 3டி படம் தாமதமாகி வரும் சூழ்நிலையில் இந்தப் படத்தை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அஞ்சனா.