தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், ஈரோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தெலுங்கில் சமீபத்தில் மகேஷ்பாபு நடித்து ரிலீசான ஸ்ரீமந்துடு படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போகிறார்களாம். இந்த படத்தில் நடிக்க நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் க்ளைமாக்சில் மட்டும் இந்தி ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தி படத்தின் கதைக்கு ஏற்றவாறு க்ளைமாக்சை மாற்றினால் சரியாக வருமா என்பது குறித்த ஆலோசனையும் போய் கொண்டுள்ளதாம். கதையின் தன்மைக்கு ஏற்றவாறு மாற்றம் கொண்டு வருவது முடிவாகும் பட்சத்தில் ஹிருத்திக் ரோஷனின் அடுத்த படம் இந்த ரீமேக் படமாக தான் இருக்குமாம்.