பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கபாலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் முதல்நாள் படப்பிடிப்பு தொடங்கியது. பின்னர் சென்னையில் உள்ள சில நட்சத்திர ஹோட்டல்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு சிறப்பு அனுமதி பெற்று சென்னை விமானநிலையத்திலும் கபாலி படப்பிடிப்பு நடைபெற்றது.
சில தினங்களுக்கு முன்பு செட்டிநாட்டு பங்களாவில் நடைபெற்ற கபாலி படப்பிடிப்பு இன்னும் சில தினங்கள் சென்னையில் தொடர உள்ளது. அதன் பிறகு முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைகிறது. கபாலி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு மலேஷியாவில் தொடர்கிறது. கபாலி படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 19 முதல் மலேஷியாவில் ஆரம்பமாகிறது. இதற்காக அக்டோபர் 17 அன்று ரஜினி மலேஷியாவுக்குப் புறப்படுகிறார். அவர் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் மலேஷியா புறப்படுகின்றனர்.