தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக, 18 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தல் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல் ரேன்ஜுக்கு பில்ட்அப் பண்ணப்பட்டுவிட்டது. அதனால் திரையுலகமே பரபரப்பாகிக் கிடக்கிறது. எந்த அணி வெற்றி பெறும் என்று படத்துறையில் திரும்பிய பக்கமெல்லாம் பட்டிமன்றம் நடக்கிறது.
நடிகர் சங்கத்தின் மொத்தம் உள்ள 3100 உறுப்பினர்களில் நாடக நடிகர்கள் சுமார் 2000 உறுப்பினர்கள் உள்ளனர். தன் கறாரான அணுகுமுறை காணமாக சினிமா கலைஞர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துள்ளார் ராதாரவி. அதே நேரம், நாடக கலைஞர்களுக்கு பல உதவிகளை செய்து அவர்களின் நன்மதிப்பை பெற்று வைத்திருக்கிறார் ராதாராவி. எனவே நிச்சயமாக நாடக நடிகர்களின் வாக்குகளில் 1500 வாக்குகள் சரத்குமார் அணிக்கு கிடைக்கும் என்றும், சினிமா நடிகர்களின் 1100 வாக்குகளில் 500 வாக்குகள் உறுதியாக கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். எனவே, உறுதியாக 2000 வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்பது சரத்குமார் அணியினரின் தெம்பாக உள்ளனர்.
விஷால் அணியினர் ஏற்பாடு செய்து, ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 1200 பேர் கலந்து கொண்டதாக சொல்கின்றனர் விஷால் அணியினர். நாடக நடிகர்களின் வாக்குகளில் சுமார் 1200 வாக்குகள் தங்கள் அணிக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் உறுதியாக சொல்கின்றனர். இந்த கணக்குகளின் அடிப்படையில் 2400 வாக்குகளுக்கு மேல் பெற்று நாங்கள் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அசைக்கமுடியாத நம்பிக்கையில் உள்ளனர்.
இதற்கிடையில் தனியார் திரைப்படக்கல்லூரி எடுத்தது என்ற பெயரில் ஒரு கருத்துக்கணிப்பு முடிவை வாட்ஸ் அப்பில் பரப்பி வருகின்றனர். விஷால் அணிக்கு 64 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும், சரத்குமார் அணிக்கு 36 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. ஆனால் கருத்துக்கணிப்பு நடத்திய தனியார் திரைப்படக் கல்லூரி எது? என்ன அடிப்படையில் கருத்துக் கணிப்பு நடத்தியது போன்ற விவரங்கள் ஏதும் இல்லை.
டென்ஷனான நேரத்தில் இப்படிப்பட்ட காமெடி வேற... தள்ளிப்போய் விளையாடுங்கப்பா...!