மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தெலுங்கு திரை உலகின் இளம் நடிகர் நிகில் அறிமுக இயக்குனர் உதய் நந்தவனம் இயக்கதில் உருவாகும் சங்கராபரனம் படத்தில் நடிக்கின்றார். நிக்கிலுக்கு ஜோடியாக நடிகை நந்திதா ராஜ் நடித்து வரும் சங்கராபரனம் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன்(அக்டோபர் 3) முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றவுடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளன. தயாரிப்பாளர் எம்.வி.வி.சத்யநாராயணா தயாரிக்கும் இப்படத்தின் டீசரை அடுத்த வாரம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பிரபல கதையாசிரியர் கோன வெங்கட் திரைக்கதை வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரவீன் லக்கிராஜு இசையமைக்கின்றார். இப்படத்தை இவ்வருடம் வரும் தீபாவளிக்கு திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது.