நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
தெலுங்கு திரை உலகில் நட்சத்திர நகைச்சுவை நடிகர் என புகழ் பெற்று தற்போது நாயகனாக பிசியாகியுள்ள சுனில் தற்போது, ஜோஷ் பட புகழ் இயக்குநர் வாசு வர்மா இயக்கும் கிரிஷ்னஷ்டமி படத்தில் நடித்து வருகின்றார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகை டிம்பிள் சொப்டே ஆகியோர் சுனிலுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறுதிக் கட்டதை எட்டியுள்ள இப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.. இப்படத்தைத் தொடர்ந்து சுனில் இயக்குநர் வம்சி கிருஷ்ணா அகேல்லா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இப்படத்தில் சுனிலுக்கு ஜோடியாக ஹிந்தி நடிகர் பிரச்சி தேசாய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.