‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் கமல்ஹாசன் தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் கிடைத்த தொகை 10 கோடி ரூபாயையும், அவரது சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, 'பெற்றால் தான் பிள்ளையா' என்ற ட்ரஸ்ட்டிற்கு வழங்கியுள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களிலும், ஒரு சில இணைய தளங்களிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இந்த செய்தி குறித்து பெற்றால் தான் பிள்ளையா ட்ரஸ்ட்டின் வினிதா சித்தார்த் கூறியதாவது.. “அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர் பேடை பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பியிருக்கிறார்கள். இதன் மூலமாக இரண்டு பிரச்னைகள். ஒன்று எங்களிடம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததன் மூலம் பெரிய உதவிகள் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் உருவாகிவிடும். அடுத்ததாக எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களும், அவர்களுக்குத் தான் பெரிய தொகை கிடைத்துள்ளதே என்ற எண்ணமும் தோன்றி விடும். இரண்டுமே எங்களை பாதிப்புக்குள்ளாக்கும். எனவே இப்படி ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.